நித்தியானந்தாவின் தனி நாடு என கூறப்படும் கைலாஸாவில் விசா வாங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் செய்த ட்வீட் வைரலாகி வருகிறது.

ashwin tweet about kailaasa

Advertisment

Advertisment

நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என இந்துக்களுக்கான ஒரு நாடாக நித்தியானந்தா அதனை உருவாக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டிற்கு எப்படி விசா வாங்குவது என அஸ்வின் கேட்டுள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கைலாஸாவில் விசா பெறுவதற்கான நடைமுறை என்ன ?? என அவர் போட்டுள்ள அந்த பதிவிற்கு பலரும் பலவிதமான பதில்களை அளித்து வருகின்றனர்.