இந்திய பொருளாதாரத்தில் தேக்கநிலை நிலவி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதனையடுத்து பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்தும், தாற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தியும் வருகின்றன.

Advertisment

ashok leyland stops production temporarily

அந்த வரிசையில் அசோக் லேலண்ட் நிறுவனம் தனது 5 தொழிற்சாலைகளில் மொத்தமாக 59 வேலைநாட்களை விடுமுறையாக அறிவித்துள்ளது. எண்ணூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் இம்மாதம் 16 நாட்களும், ஓசூர் தொழிற்சாலை 5 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.

அதேபோல ராஜஸ்தானில் உள்ள ஆல்வார், மஹாராஷ்டிராவின் பந்த்ரா தொழிற்சாலைகளில் 10 நாட்களும், பந்த் நகரில் 18 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என அறிவித்துள்ளது. போதுமான அளவு விற்பனை நடைபெறாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.