அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான வினோத் கே. தாசரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் நடப்பு நிதி ஆண்டான 2019 மார்ச் 31 வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

vvv

சென்னையில் நேற்று நடைபெற்ற இயக்குநர் கூட்டத்தில் இவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தாசரி தெரிவித்துள்ளார். இவருக்கு பதிலாக நிறுவனத்தின் செயல் தலைவராக தீரஜ் ஹிந்துஜா பொறுப்பேற்றுள்ளார்.

Advertisment