தலைவர் பதவிக்கு ராகுல்காந்தி... முன்மொழிந்த அசோக் கெலாட் - செயற்குழு உறுப்பினர்களின் பதில் என்ன? 

congress working committee

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (16.10.2021) டெல்லியில் நடைபெற்றுவருகிறது. பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெறும் உட்கட்சி மோதல், கட்சி தலைமை மீது மூத்த தலைவர்களின் அதிருப்தி என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த செயற்குழு கூடியது.

இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, தான்தான் தற்போது கட்சியின் முழுநேர தலைவர் என அதிரடியாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ஏற்கனவே கரோனாகாரணமாக தள்ளிவைக்கப்பட்டகாங்கிரஸ் தலைவருக்கானதேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில், காங்கிரஸின்அடுத்த தலைவராகராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் எனஅசோக் கெலாட் முன்மொழிந்துள்ளதாகவும், அவரின்கருத்தைக் காங்கிரஸின்செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரித்துள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது.

Ashok Gehlot congress Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe