இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லியிலும் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கரோனா நான்காவது அலை ஏற்பட்டுள்ளதாகக் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியிருந்தார். தற்போது கரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் அங்கு 6 நாட்கள்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்துஅவர் தன்னை வீட்டிலேயேதனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தனது மனைவிக்கு கரோனாதொற்று உறுதியானதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலும்தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.