Advertisment

"மிகவும் சிரமப்பட்டு நாடு மீண்டுள்ளது" - ஓமிக்ரான் குறித்து பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை!

ARVIND KEJRIWAL

Advertisment

தென்னாப்பிரிக்கா நாட்டில்50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529என்ற புதிய கரோனாதிரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்டமரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில்ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பைக் ப்ரோட்டினில்பல பிறழ்வுகள் இருப்பதால், இது வேகமாக பரவலாம்என்றும், தடுப்பூசிகள் அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை ஊடுருவலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்தப் புதிய வகை கரோனாகண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து,பல்வேறு நாடுகள் தென்னாப்பிரிக்காவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்தும் தங்கள் நாட்டிற்கு பயணிகள் வர தடை விதித்துள்ளன. அதேபோல்தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய மூன்று நாடுகளிலிருந்தும் வருபவர்களுக்குத் தீவிர சோதனைகள் நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், உலக சுகாதார நிறுவனம், இந்தப் புதிய வகை கரோனாவைக் கவலைக்குரியது என வகைப்படுத்தியுள்ளதுடன், இந்தப் புதிய வகை கரோனாவிற்கு‘ஓமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது.

Advertisment

இந்தநிலையில்அரவிந்த் கெஜ்ரிவால்,ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "புதிய (கரோனா) திரிபால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வரும் விமானங்களை நிறுத்துமாறு பிரதமரைக் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சிரமப்பட்டு, நம் நாடு கரோனாவில் இருந்து மீண்டுள்ளது. இந்தப் புதிய திரிபு இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க சாத்தியமான அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

OMICRON Narendra Modi Arvind Kejriwal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe