Arvind Kejriwal issues action notice

Advertisment

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும்கரோனா இரண்டாம் அலைபரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி, படுக்கை வசதி இல்லாமை போன்ற பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகிறது தலைநகரானடெல்லி. அங்குபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனாவால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளின் முழுகல்விச் செலவை அரசே ஏற்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதேபோல் கரோனாவால் குடும்பத்தில் உறுப்பினர்களை இழந்து தவிக்கும் முதியவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.