arvind kejriwal

Advertisment

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், இன்றுடன் 19 ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இன்று, 40 விவசாய சங்கத் தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தநிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தனது ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களோடு, விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள், காய்கறி மற்றும் பழங்களின் விலையை அதிகரிக்கவைத்துவிடும் என்றும் இச்சட்டங்கள், பொதுமக்களுக்கு எதிரானது. அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

ஏற்கனவேஅரவிந்கெஜ்ரிவால், டெல்லியில் போராட்டம் நடத்தும்விவசாயிகளை நேரில் சந்தித்துஆதரவு தெரிவித்ததுகுறிப்பிடத்தக்கது.