அரவிந்த் கெஜ்ரிவால் 7 மணிநேரம் தொடர் தியானம்

Arvind Kejriwal 7 hours continuous meditation

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐஅதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மணீஷ் சிசோடியவை சிபிஐ அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது

இந்த நிலையில் மக்களுக்கு தரமான கல்வியையும்மருத்துவத்தையும் கொடுக்க நினைத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பிரதமரின் செயல் கவலை அளிக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மேலும், நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், அதனால் நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று தியானம் இருக்கப்போவதாகவும் கூறியிருந்தார். அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Subscribe