tytyd

Advertisment

சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு, இவரது சிறுநீரகங்கள் செயலிழந்ததால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக தற்போது அவர் அமெரிக்கா சென்றுள்ளார். வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அருண் ஜெட்லி நேற்று திடீரென அமெரிக்கா கிளம்பியுள்ளார். மேலும் அவர் எப்போது இந்தியா திரும்புவார் என்பது பற்றிய விபரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.