dsvdvfdv

Advertisment

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் இந்தியா திரும்பினார். கடந்த மாதம் 13-ந்தேதி அமெரிக்காவுக்கு சென்ற அவர் ஒரு மாத கால சிகிச்சைக்கு பின் கடந்த வாரம் நாட்டு திரும்பினார். அவர் சிகிச்சையில் இருந்த காரணத்தால் அவரது நிதித்துறை, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. நிதித்துறையை கூடுதலாக கவனித்தது வந்த அவர் கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில், அருண் ஜெட்லி நிதியமைச்சராக பதவியேற்றுக்கொள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து அவரிடம் நிதி இலாகா மீண்டும் தற்போது ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நீண்ட நாள் தொடர் சிகிச்சையில் இருந்ததால் உடல் நலிவுற்றிருக்கும் அவரை அவரது பாதுகாவலர்கள் கைத்தாங்கலாக அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.