நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பில், இடைக்கால பட்ஜெட் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த நிதி ஆண்டில் அரசுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.10,000 கோடியை ரிசர்வ் வங்கி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அதனை அதிகரித்து ரூ.28,000 கோடி டிவிடெண்டாகத் தரலாமென ரிசர்வ் வங்கியிடம் அரசு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து இன்று நடக்கவிருக்கும் சந்திப்பில் பேச்சு வார்த்தை நடக்கலாமென தகவல்கள் வெளியாகியுள்ளது.