Advertisment

இந்தியாவில் அனைத்து கணினிகளும் மத்திய அரசு கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது குறித்து அருண் ஜெய்ட்லி விளக்கம்

fdgn

Advertisment

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கணினிகளும் மத்திய அரசின் 10 அமைப்புகளின் கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்படும் என இன்று காலை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகள் இந்தியாவில் உள்ள அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்களின் கணினிகளையும் கண்காணிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் கிளப்பி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி, தேசப்பாதுகாப்புக்காகவே கணினி தகவல்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த அரசாணைதான் தற்பொழுது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Arun Jaitley
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe