கர்நாடகாவின் பொலிகவுன் என்ற கிராமத்தில் தாயின் செட்டுப்பல்லை தவறுதலாக உடைத்த ஆறு வயது சிறுமியை கை, கால்களை கட்டி நீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை செய்து வரும் காவல்துறையினர், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.