வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே 50 வாக்குகள் பதிவு... பதிலளிக்க மறுத்த தேர்தல் அதிகாரி...

டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைதேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் போட்டியிடுகின்றனர்.

artifacts in delhi loksabha election polling

இந்நிலையில் இன்று காலை முதல் டெல்லியின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சர்ச்சையாகியுள்ளது. அந்த வகையில் டெல்லியின் மாலவியா நகரில் உள்ள 132 ஆம் எண் வாக்கு மையத்தில், ஹஸ்ரானி என்பவர் முதல் நபராக வாக்களிக்கச் சென்றுள்ளார். ஆனால் முதல் வாக்கை அவர் செலுத்த சென்ற போதே வாக்கு எந்திரத்தில் 50 வாக்குகள் பதிவாகியுள்ளதை கண்டுள்ளார். மேலும் இது எவ்வாறு நடந்தது" என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், இதுகுறித்து டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி எந்தவிதமான கருத்தையும் கூற மறுத்துவிட்டார். இதேபோல டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் வாக்குஇயந்திரங்கள் கோளாறுகளை சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe