Advertisment

சிறுவன் மீது பாய்ந்த மர்ம அம்பு... ம.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்தியாவில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று மத்திய பிரதேசம். அங்குள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில்உள்ள மராஜ்பூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் அம்பு ஒன்றை எய்துள்ளனர். வேகமாக வந்த அம்பு சிறுவனின் தலை பகுதியில் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த சிறுவனை மீட்டு அலிராஜ்பூர் மருத்துவமனையில் சேர்ந்தவர். சிறுவனை சோதித்தமருத்துவர்கள் சிறுவனின் தலைப்பகுதியில், 4 அங்குலத்திற்கு அம்பு இறங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisment

மேலும் அம்பின் தலைபகுதியில் இருந்த இரும்பு பகுதி சிறுவனின் தலையில் சிக்கியிருந்தது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்த 8 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், அதனை நீண்ட போராட்டத்திற்கு பிறகு நீக்கியுள்ளனர். தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். சிறுவனின் மீது அம்பு எய்தவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருவதாக அம்மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe