டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்த பீகார் வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 31-ஆம் தேதி உச்சநீதிமன்றம், நாடு முழுக்க பட்டாசு வெடிக்க சில கட்டுபாடுகளுடன் அனுமதி அளித்தது. அதேசமயம் டெல்லியில் பழைய பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடைவிதித்தது. அதற்கு மாற்றாக டெல்லியில் மாசு ஏற்படுத்தாத பசுமை ரக பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் கிழக்கு டெல்லியில் மயூர் விஹார் எனும் இடத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தாமன் தீப் என்பவர் கடந்த 1-ஆம் தேதி பழைய பட்டாசுகளை வெடித்துள்ளார். இதனை அறிந்த போலீசார் அவரை இந்திய தண்டனை சட்டம் 188-ன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.