Advertisment

“கோயில் நிலங்களை அபகரித்த பா.ஜ.கவினரை கைது செய்!” - நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!

publive-image

Advertisment

‘போலி ஆவணங்களின் மூலம் கோவில் நிலங்களை அபகரித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியினைத்தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி புதுச்சேரி அவ்வை திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி மாநிலச் செயலாளர் முத்.அம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். காமராஜர் நகர் சட்டமன்றத்தொகுதி தலைவர் திவாகர், செயலாளர் செகதீஷ் ஆகியோர்முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் அனைத்துத்தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, ‘காமாட்சி அம்மன் கோவில் நிலத்தைப்போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்து,கைது செய்ய வேண்டும். கோவில் நிலத்தை வாங்கியவர்கள் மற்றும் கோவில் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் தனியாருக்கு விற்பனை செய்த அதிகாரிகள் மற்றும் துணை போன அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய செய்ய வேண்டும். புதுச்சேரியில் அனைத்து கோவில் நிலங்கள் மற்றும் பொதுச் சொத்துகளை அபகரித்தவர்களிடமிருந்து அந்த சொத்துக்களை மீட்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

Pondicherry ntk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe