Advertisment

ராமர் கோவில் திறப்பு விழா; ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு

arrangements in Railway Stations for Inauguration of Ram Temple

Advertisment

உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேசமாநிலத்தில் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் ஜனவரி 22ஆம் தேதி மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.மேலும், அன்றைய தினத்தில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பையொட்டி, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிரவிட ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

uttarpradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe