INDIA BORDER

பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதியில்துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அதற்கு இந்திய இராணுவம்பதிலடி தருவதும் வழக்கமானஒன்றாக இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டன.

Advertisment

இந்தநிலையில், இந்தியாவிற்குள்ஊடுருவ கிட்டத்தட்ட 140 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "சுமார் 140 தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ காத்திருப்பதை இந்திய இராணுவம் கண்டறிந்து, கண்காணித்துவருகிறது. வலுவான ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளால் அவர்கள் இதுவரை ஊடுருவ முயற்சிக்கவில்லை. கடந்த காலங்களில் அவர்கள் ஊடுருவ முயன்றனர். ஆனால் இராணுவ வீரர்கள், அவர்களின் முயற்சியை முறியடித்ததால் திரும்பிச் செல்ல வேண்டியதாகிவிட்டது" என கூறியுள்ளார்.

Advertisment

மேலும் அந்த அதிகாரி, "கடந்த வருடம் பாகிஸ்தான் இராணுவம்இந்திய குடியிருப்புப் பகுதிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதற்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் எல்லைப்பகுதியில்அமைந்துள்ள பாகிஸ்தானின்உட்கட்டமைப்புகள் சேதமடைந்துவிட்டன. தற்போது போர் நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் அந்தஉட்கட்டமைப்புகளை சரி செய்துவருகிறது" எனவும்கூறியுள்ளார்.