arnab goswami arrested

Advertisment

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை காவல்துறை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் இல்லத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018ஆம் ஆண்டு ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அவரதுவீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் தன்னை,தனது மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோவின் படி, மும்பை போலீஸார் அர்னாப் கோஸ்வாமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது.