Army helicopter crashes

Advertisment

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்ததில் விமானி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

இன்று காலை அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் தவாங்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்த நிலையில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடன் பயணித்த மற்றொரு ராணுவ வீரர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.