ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரில் இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்திய இராணுவத்தின் ஏ.எல்.எச். துருவ் எனும் ஹெலிகாப்டர் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம், மர்வா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பயணித்த வீரர்களின் உயிருக்கு ஆபத்தின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.