Advertisment

பழைய இரும்பு கடையில் ராணுவ துப்பாக்கி... வெடித்ததில் இருவர் பலி...

பழைய இரும்பு கடையில் ராணுவ துப்பாக்கியில் இருந்த குண்டு தவறுதலாக வெடித்ததில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் மஹாராஷ்டிராவில் நடந்துள்ளது.

Advertisment

army gun in scrap shop

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் கரே கர்ஜூன் என்ற கிராமத்தில் பழைய இரும்பு கடை ஒன்று உள்ளது. இன்று அதிகாலை வந்த பழைய இரும்பு லோடில் உள்ள பொருட்களில் உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கை பிரிக்கும் பணியை சாக்கடையில் வேலைபார்க்கும் சிலர் செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் விற்பனைக்கு வந்த ராணுவ துப்பாக்கி ஒன்றை எடுத்து அதிலிருந்து உலோகத்தை மட்டும் தனியாக பிரித்தெடுக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அதில் ஏற்கெனவே இருந்த துப்பாக்கிக் குண்டு எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அப்போது அருகில் இருந்த இருவர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

indian army Maharashtra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe