Advertisment

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக பொறுப்பேற்ற இராணுவ தளபதி நரவனே!

naravane

முப்படை தலைமை தளபதியானபிபின் ராவத், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் அடுத்த முப்படை தலைமை தளபதியைநியமிக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவதளபதி நரவனே பொறுப்பேற்றுள்ளதாகபாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

Advertisment

முப்படை தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும் வரை, முப்படை தளபதிகளில் மூத்தவரே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்பட்டுவந்தார். அப்பதவி உருவாக்கப்பட்ட பின்னர், முப்படை தலைமை தளபதியே முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

Advertisment

இந்நிலையில், முப்படை தலைமை தளபதியானபிபின் ராவத்தின் திடீர் மரணத்தையடுத்து, தற்போதைய முப்படை தளபதிகளில்மூத்தவரான இராணுவ தளபதி நரவனே அப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளார். புதிய முப்படை தலைமை தளபதி நியமிக்கப்படும்வரை, நரவனே முப்படை தளபதிகள் குழு தலைவராகசெயல்படவுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe