Advertisment

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 7 -ஆவது நாளாக, விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மத்திய அரசுடன் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அரசு கொடுக்க இருந்த மதிய உணவைப் புறக்கணித்து, தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து உண்டார்கள். இந்தச் சம்பவம் காண்பவர்களை நெகிழச்செய்தது.