கடந்த வருடம் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற படமாக இருந்தது மட்டுமில்லாமல் பெரும் வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை சந்தீப் இயக்கியிருந்தார் விஜய் தேவரகொண்டா நடித்து இருந்தார், படம் இளைஞர்களிடையே செம்ம வரவேற்பை பெற்றது . இப்போது இந்த படத்தை தமிழ், ஹிந்தியில் எடுத்துள்ளனர், ஹிந்தியிலும் தெலுங்கில் இயக்கிய சந்தீப்பே அர்ஜுன் ரெட்டியை, கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

Advertisment

arjun reddy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சந்தீப் கேள்வி கேட்ட ஒருவரை அவமானப்படுத்தியிருக்கிறார். அதாவது பத்திரிகையாளர் ஒருவர் சந்தீப்பிடம் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, பதிலை கவனிக்காமல் இருந்துள்ளார். இதில் கடுப்பான சந்தீப் 'கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டு, பதிலை கேட்காமல் என்ன செய்கிறீர்கள்' என கேட்க அரங்கமே சிரிப்பலையாக இருந்துள்ளது.