ADVERTISEMENT

"இந்த அப்பளம் கரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும்" - பா.ஜ.க. அமைச்சரின் சர்ச்சை வீடியோ...

12:19 PM Jul 24, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பாபிஜி அப்பளம்' என்ற அப்பளத்தை அறிமுகப்படுத்திய பா.ஜ.க. மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இந்த அப்பளம் கரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் எனத் தெரிவித்துள்ளது கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா குறித்த எந்தவொரு தவறான தகவல்களையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த அறிவுரைகளுக்கு முரணாகப் பாராளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரகத் தொழில்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஒரு அப்பள பிராண்டை விளம்பரப்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'பாபிஜி அப்பளம்' என்ற அப்பள பிராண்டை அறிமுகப்படுத்தி அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், கரோனா வைரஸிற்கான ஆன்டிபாடிகளை உருவாக்க இந்த பிராண்ட் அப்பளம் உதவும் எனவும், கரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும் பொருட்கள் இந்த அப்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் பேசுவது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் பேசிய அவர், "ஆத்மனிர்பர் பாரத்தின் கீழ், ஒரு உற்பத்தியாளர் 'பாபிஜி அப்பளம்' என்ற பெயரில் அப்பள நிறுவனம் தொடங்கியுள்ளார். இது கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்க இரவு பகலாக உழைத்து வரும் சூழலில், மத்திய அமைச்சரின் இந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT