Advertisment

அரிக்கொம்பன் யானைக்கு ரசிகர் மன்றம்; பேனரை அகற்றிய போலீசார்

Arikomban Elephant Fan Club; Police removed the banner

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வனப்பகுதி கிராமங்களில் மிகவும் பிரபலமானது அரிக்கொம்பன் யானை. அரிசியை விரும்பிச் சாப்பிடும் இந்த யானை யானைக்கு அரிக்கொம்பன்என பெயர் வந்தது. திடீர் திடீரென ஊருக்குள் புகுந்து வயல்களை சேதப்படுத்தும் இந்தஅரிக்கொம்பன் யானை மக்களை தாக்கியதாகவும் பலஉயிரிழப்புகள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

Arikomban Elephant Fan Club; Police removed the banner

இதனால் அரிக்கொம்பன் என்ற பெயரை கேட்டாலே மக்கள் அச்சத்தில் உறையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் மறுபுறம் கேரளாவைகலக்கி வரும் அந்த யானைக்கு ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. மூணாறு பகுதியில் 'அரிக்கொம்பன் டீ ஸ்டால்' என ஒருவர் கடை திறந்துசுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளார். அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து ரசிகர் மன்றத்தையும் துவங்கி அதற்கான பேனரை வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் தலையிட்டு அந்த பேனரைஅகற்றியுள்ளனர்.

Advertisment

police banners fans Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe