
வாக்குவாதத்தில் ஏற்பட்ட தகராறால் நண்பரின் காதின் ஒரு பகுதியைக் கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்தவர் ஷ்ரவன் லீகா (37). இவரது நண்பர் விகாஸ் மேனன் (32). இவர்கள் இருவரும், பட்லிபாட்ட பகுதியில் உள்ள ஆடம்பரமான வீட்டுவசதி சங்கத்தில் விருந்து வைத்திருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலில் வந்தது. இதில் ஆத்திரமடைந்த விகாஸ் மேனன், தனது நண்பர் ஷ்ரவன் லீகாவின் காதின் ஒரு பகுதியைக் கடித்து விழுங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், லீகாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், விகாஸ் மேனன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.