Skip to main content

ஐநா சபையின் ஆலோசனை குழுவில் இந்திய பெண்...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

archana soreng selected for uno advisory team

 

 

ஐநா சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனை குழுவில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார். 

 

உலகளவில் நடந்துவரும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஐ.நா. சபை சார்பில் கடந்த 27-ம் தேதி ஆறு பேர் கொண்ட புதிய குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ஒடிசாவைச் சேர்ந்த அர்ச்சனா சோரங் இடம்பிடித்துள்ளார். ஒடிசாவின் ரூர்கேலா பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா, பாட்னா மகளிர் கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ளதோடு, கடந்த பல ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் அமைப்பில் ஒடிசா பகுதி ஆராய்ச்சியாளராக பணியாற்றி வரும் அர்ச்சனா, ஐநா சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆலோசனை குழுவில் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. கூட்டணி முயற்சி தோல்வி; வெளியான பரபரப்பு தகவல்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP Coalition efforts fail Exciting information released
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே சமயம் ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களவைத் தேர்தலுடன் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொண்டிருந்தது. 

இந்நிலையில் ஓடிசாவில் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதாதளம் உடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் பா.ஜ.க. - பிஜு ஜனதா தளம் இடையே உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் நிபந்தனைகளை பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதியிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

BJP Coalition efforts fail Exciting information released
பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி

இது குறித்து ஒடிசா மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமலின் எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒடிசாவில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம் இது குறித்து பா.ஜ.க. எம்.பி. அப்ரஜிதா சாரங்கி கூறுகையில், “அனைத்து தொகுதிகளிலும் எங்கள் (பா.ஜ.க.) வேட்பாளர்களை நிறுத்துவோம். 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 மாநில சட்டசபை தொகுதிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த ஆற்றலும், மிகுந்த உற்சாகமும், தேர்தல் பணியின் மீது மிகுந்த ஆர்வமும் உள்ளது, எது நடந்ததோ அது நடக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த சரியான முடிவை எடுத்த அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதாதளம் 12 மக்களவைத் தொகுதிகளையும், பா.ஜ.க. 8 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. மேலும் பிஜூ ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை கடைசி 4 கட்டங்களாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

வி.கே.பாண்டியன் மீது தாக்குதல்; ஒடிசாவில் பரபரப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Tomato thrown at VK Pandian in Odisha

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்பு ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய வி.கே.பாண்டியன்  கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். சொல்லப்போனால் ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அதற்கு அடுத்தநாள் ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். . ஒடிசா முதல்வருக்கு கீழ் நேரடியாக பணியாற்றும் வகையில் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின்  ஒடிசாவின் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். 

Tomato thrown at VK Pandian in Odisha
தக்காளி வீசிய நபரை தாக்கும் தொண்டர்கள்

இந்த நிலையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.கே பாண்டியன் பங்கேற்றிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் தக்காளியை வீசினார். பின்னர் தக்காளி வீசிய அந்த இளைஞரை  பிஜீ ஜனதள தொண்டர்கள் கடுமையாக தாக்கி இழுத்துச் சென்றனர். காவல்துறை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.