அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பகவத் கீதை கற்க வேண்டும் என்று பாஜக எம்.பி. அரவிந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
ஹரியானா பாஜக எம்.பி. அரவிந்த் சர்மா, நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசியபோது, ’’இந்து வேதமான பகவத் கீதையை மாணவர்கள் கற்கும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
அவர் தனது பேச்சில் மேலும், ‘’ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் கீதை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளும் தனது சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் விடை தேட கீதை புத்தக்கத்தைத்தான் நாடினார்’’என்றும் குறிப்பிட்டார்.