aravind kejriwal

Advertisment

கொல்கத்தாவில் எதிர்கட்சிகள் ஒன்றாக பங்கேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,‘மீண்டும் பதவிக்கு வந்தால், மோடி, அமித்ஷா இருவரும் தேர்தல் நடைமுறைகளை மாற்றி ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவர். இருவரும் அடோல்ஃப் ஹிட்லரை போல செயல்படுவார்கள். நாட்டு மக்களிடையே இருவரும் மதம், சாதி ரீதியான மோதல்களை தூண்டிவிடுகின்றனர்’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.