வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பார்வையிட உள்ளார். போராட்டம் தொடங்கி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில், 5 சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின்னும் இரு தரப்பிலும் சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
டெல்லியின் எல்லைகளில், சாலைகளிலே தங்கி, கடும்குளிரைப் பொருட்படுத்தாமல், போராடிவரும் போராட்டக்காரர்களையும், மாநில அரசு சார்பாக அவர்களுக்குச் செய்து தரப்பட்டுள்ள வசதிகளையும் பார்வையிடும் கெஜ்ரிவால், தனது மந்திரிகள் சகிதம் பார்வையிடுகிறார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாரத் பந்த் அறிவித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா ஆதரவு விவசாயச் சங்கமான பாரதிய கிசான் சங்கம் பந்த்-இல் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.