டெல்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் அதிகமாக படிக்கிறார்கள். இதனால் டெல்லி மாணவர்களுக்கு தன சொந்த ஊரிலேயே படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே ஆம் ஆத்மீ ஆட்சிக்கு வந்தால் டெல்லி மாணவர்களுக்கு முன்னுரிமை தரப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது இணையத்தில் வைரலானது. தமிழர்களுக்கு எதிரான கருத்தை அவர் பேசுகிறார் என எதிர்ப்பு எழுந்தது.

Advertisment

aravind kejriwal apologise to tamil student over his remark about university admissions

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் அப்படி பேசியதற்காக தற்போது அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், "எனக்கு தமிழக மக்கள் மற்றும் மாணவர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் பல்வேறு விஷயங்களில் தமிழர்களின் பங்கு உள்ளது, அதை நான் பாராட்டுகிறேன். என்னுடைய கூற்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் ஒரு குறிப்பிட்ட கல்லூரியை குறித்து மட்டுமே உதாரணம் தர விரும்பினேன்.

Advertisment

நான் எப்போதும் தமிழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், என் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. எனது மாநிலத்தில் 12ம் வகுப்பில் 98% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கூட, கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் தான் டெல்லியில் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 85% இடங்களையும், மற்ற மாநில மாணவர்களுக்கு 15% இடத்தையும் ஒதுக்க விரும்பி அப்படி கூறினேன். ஆனால், மத்திய அரசின் உதவி பெறும் கல்லூரிகளில் அனைத்து மாநில மாணவர்களும் சேரலாம். இதனால், நான் தமிழக மாணவர்களுக்கு எதிரானவன் அல்ல. நான் பயன்படுத்திய உதாரணமே தவறு. நான் தவறு செய்துவிட்டேன். எனவே நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.