Skip to main content

தூதுவராக ஏ.ஆர்.ரகுமான்!! -கெளரவ படுத்திய சிக்கிம்!!

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

இயற்கை அழகிற்கு பெயர்போன சிக்கிம் காலப்போக்கில் உயிரியல் சுற்றலாத் தலமாக உருவெடுத்து தற்போது இயற்கை கொஞ்சும் அழகுடன் மிளிர்ந்து வருகின்றது.

 

அதேபோல் இந்தியாவில் இயற்கை விவாவிசயத்தில் முதல் மாநிலமாகவும், முன்னுதாரண மாநிலமாகவும் சிக்கிம் இருந்து வருகிறது. இப்படி இயற்கை அழகிற்கு பெயர்போன சிக்கிம் மாநிலத்தின் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

ar

 

 

 

ஏற்கனவே கடந்த ஆண்டே அவர் சிக்கிம் மாநிலத்தின் மாநில வர்த்தக மற்றும் வணிக வர்த்தக தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார் ஏ.ஆர் ரகுமான். தற்போது சிக்கிம் மாநிலத்தின் மாநில தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

இதுகுறித்து சிக்கிம் அரசு அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றி சிக்கிம் மாநில முதன்மை தலைமை செயலர் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் சிக்கிம் மாநிலத்தின் பெருமைகளை அரசின் சாதனைகளை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வார் என குறிப்பிட்டுள்ளார்.   

சார்ந்த செய்திகள்

Next Story

தனது குடும்பத்தினருடன் சென்று முதலமைச்சரைச் சந்தித்த ஏ.ஆர்.ரகுமான்! 

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

AR Rahman who went with his family and met the Chief Minister!

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்துப் பெற்றார். 

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு மகள் கதீஜா ரஹ்மான் மற்றும் மருமகன் ரியாஸ்தீன் சேக் முகமது ஆகியோருடன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்றிருந்தார். அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினைச் சந்தித்த புதுமண தம்பதியர் பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றனர். 

 

AR Rahman who went with his family and met the Chief Minister!


இந்த சந்திப்பின் போது, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். 

 

 

Next Story

"வட இந்தியா, தென்னிந்தியா என்று இல்லை"- ஏ.ஆர்.ரகுமான் பேச்சு!

Published on 10/04/2022 | Edited on 10/04/2022

 

"North India, not South India" - AR Raghuvan speech!

 

இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவால் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தக்ஷின் - தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டின் (Dakshin South India Media and Entertainment Summit) இறுதி நாளான இன்று (10/04/2022) மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்துக் கொண்டனர். 

 

மாநாட்டில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இந்தியாவில் எங்கிருந்தாலும் இந்தியாதான், இதில் வட இந்தியா, தென்னிந்தியா என்று இல்லை. தமிழ் திரைப்படங்களைப் போலத்தான் மலையாள படமும், மற்ற திரைப்படங்களும். ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் மலேசியா சென்றிருந்த போது ஒருவர் தனக்கு வட இந்திய திரைப்படங்கள் பிடிக்கும் என்றார். வட இந்திய படங்கள் பிடிக்கும் எனக் கூறியவர், தென்னிந்திய படங்களைப் பார்த்தாரா என்று எண்ணத் தோன்றியது" எனத் தெரிவித்தார். 

"North India, not South India" - AR Raghuvan speech!

அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, "கரோனா சூழலில் மற்றத் துறைக்கு நிவாரணம் தந்தார்கள், ஆனால் சினிமா தொழிலுக்கு தரவில்லை. தங்கம் வாங்கும்போது அதற்குரிய பணத்தைத் தந்து வாங்குகிறோம்; ஆனால் சினிமாவை அப்படி வாங்குவதில்லை. எங்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பை அரசு வழங்கினால், நாங்களே எங்களைப் புனரமைத்துக் கொள்வோம்" என்றார். 

 

நடிகர் நாசர் பேசுகையில், "இந்தி சினிமாவில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. ஒரு சினிமா என்பது மொழி சார்ந்த எல்லையோடு இல்லாமல், பிறமொழி சார்ந்தவர்களின் திறனையும் பகிர வேண்டும். கற்றலில் இருக்கும் செல்வம் வேறு எதிலும் இல்லை" எனக் கூறினார்.