Advertisment

காங்கிரஸ் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற திருநங்கை

yghjncy

காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணியின் பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் அதிமுக வில் இருந்த அப்ஸரா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அக்கட்சியிலிருந்து விலகினார். அரசியலுக்கு வருவதற்கு முன் பத்திரிகை, சமூக செயல்பாட்டாளர் என பல துறைகளில் செயல்பட்டவர் இவர். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணிபுரிந்தார். அதிமுக விலிருந்து விலகிய பின் சமீபத்தில் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணியின் பொதுச்செயலாளராக ராகுல் காந்தி நியமனம் செய்து உள்ளார். ஒரு தேசிய கட்சியில் முதன்முதலாக ஒரு திருநங்கை பதவியில் அமர்த்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Transgender congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe