நாடாளுமன்றத்தில் 31 பேர் கொண்ட பாதுகாப்பு குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவிற்கு ஜுவால் ஓரம் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் உள்பட மக்களவையைச் சேர்ந்த 21 பேரும், மாநிலங்களவையைச் சேர்ந்த 10 பேரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஜி.கே.வாசன், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பாதுகாப்புத்துறை தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யும் போது, அதனை விரிவாக ஆய்வு செய்யும் நோக்கில், இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.