பூஜை செய்து இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட "அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்"! (வீடியோ).

அமெரிக்காவில் விமான தயாரிப்பில் முன்னணி நிறுவனமான "போயிங் நிறுவனத்துடன்" இந்திய அரசு கடந்த 2015- ஆம் ஆண்டு அதி நவீன ஏஹெச்64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் 22 வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது. அதன்படி, அந்த நிறுவனம் 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒப்படைத்தது. இந்த ஹெலிகாப்டர்கள் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

apache ah64e helicopters india punjab pathankot airforce ceremony

இந்நிலையில் அதி நவீன ஏஹெச்64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில் விமானப்படை தளபதி தனோவா பங்கேற்றார். அப்போது அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு பூஜை செய்து, தேங்காய் உடைத்து, அதன் பிறகு இந்திய விமானப்படையில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டது. மேலும் அப்பாச்சி ஹெலிகாப்டர் மீது வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.

apache ah64e helicopters india punjab pathankot airforce ceremony

அதிநவீன ஏஹெச்64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அமெரிக்கா அரசின் ஒப்புதலுடன் இந்திய அரசு பெற்றுள்ளது. தற்போது இந்தியாவுக்கு 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ள நிலையில், மீதம் வழங்க வேண்டிய 14 ஹெலிகாப்டர்கள் 2020-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

apache ah64e helicopters india punjab pathankot airforce ceremony

இந்த வகை அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அமெரிக்கா, ஜப்பான், சவூதி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது.நான்கு பிளேடுகளுடன் சுழலும் ஹெலிகாப்டர், குறைவான உயரம் பறக்கும் திறன் கொண்டது. இரண்டு பேர் மட்டுமே ஹெலிகாப்டரில் பயணிக்க முடியும். அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள் மூலம் எதிரிகளை எளிதாக தாக்கும் வல்லமை கொண்டது. மேலும் சென்சார், தொலைநோக்கு உபகரணங்கள், இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளது.

APACHE AH 64 E

இந்திய விமானப்படையில் ஏஹெச்64இ ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இணைக்கப்பட்டதன் மூலம், இந்திய விமானப்படைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. அதேபோல் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இயக்க, இந்திய அதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை தீவிர பயிற்சி அளிக்கப்படும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு ஹெலிகாப்டர் சர்வீஷை போயிங் நிறுவனம் மேற்கொள்ளும்என தகவல் வெளியாகியுள்ளது.

#WATCH Punjab: The Apache chopper receives water cannon salute, before induction at the Pathankot Air Base. pic.twitter.com/YNT49rjr3B

— ANI (@ANI) September 3, 2019

AH64E HELICOPTERS BOEING COMPANY India indian air force usa
இதையும் படியுங்கள்
Subscribe