Skip to main content

சாகசம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம்தான் கிடைத்ததா..? - சர்ச்சையை ஏற்படுத்திய ரோஜா!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
gfh

 

ஆம்புலன்ஸ் வாகனத்தை நடிகை ரோஜா ஓட்டிய சம்பவம் தற்போது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படத்தியுள்ளது. நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா அடிக்கடி ஏதாவது பரபரப்பில் சிக்கிக்கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகின்றது.

 

ஆந்திராவில் சில தினங்களுக்கு முன்பு அனைத்து வசதிகளை உள்ளடக்கிய 108 ஆம்புலன்ஸ் சேவையை, அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் துவக்கி வைத்தார். இந்த திட்டத்தை தன்னுடைய நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நடிகை ரோஜா தொடங்கி வைத்தார். புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் ஆம்புலன்ஸ் வாகனத்தை சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரே ஓட்டினார். இந்த சம்பவத்தை தற்போது எதிர்கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. “ரோஜா அவசரகால ஊர்தியை ஓட்ட லைசென்ஸ் வைத்துள்ளாரா, சாகசம் செய்ய வேறு இடமே அவருக்கு கிடைக்கவில்லையா" என்று அம்மாநில எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இறந்த பிறகு உடல் உறுப்புகளை மண்ணுல புதைக்காதீங்க, மனிதருக்கு கொடுங்க” -  அமைச்சர் ரோஜா

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Minister Roja said to donate body parts.

 

வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்பு தான விழா நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரோஜா, வேலூர் மாநகர மேயர் சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

விழாவில் பேசிய ரோஜா, “ரத்த தானம் அனைவருக்கும் தெரியும். உடல் உறுப்பு தானம் பொதுமக்களுக்கு அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. உயிரிழந்த பின்னரும் மற்றவர் ஒருவருக்கு வாழ்க்கை கொடுப்பது தான் உடல் உறுப்பு தானம். தற்போதுள்ள இளைஞர்களுக்கு இதற்கான விழிப்புணர்வு அதிகம் தேவை. எந்த ஒரு மதமும் எந்த ஒரு தெய்வமும் உடல் உறுப்பு தானம் செய்யக்கூடாது என்று கூறவில்லை. தானத்தில் சிறந்தது அன்னதானம் அதைவிட சிறந்தது உடல் உறுப்பு தானம்.

 

இன்றைக்கு ஆயிரம் மடங்கு சிறந்த தானம் உடல் உறுப்பு தானம். அன்னதானம் பசியைப் போக்கும். கல்வி தானம் அறியாமையைப் போக்கும், உடல் உறுப்பு தானம் ஒரு மனிதனுக்கு உயிரையே கொடுக்கும். உறுப்பு தானம் அளிக்கப்படுவதன் மூலம் இறந்த பிறகு நாம் உயிரோடு வாழ்வோம்.

 

இறந்த பிறகும் நாம் கடவுளாக இருப்பதற்கு நான்கு பேருக்கு உடல் உறுப்பு தானம் செய்தால் போதுமானது. இறந்த பிறகு உடல் உறுப்புகளை மண்ணில் புதைக்காதீங்க. மனுஷங்க மேல விதையுங்கள். அப்போது நாம் வாழ்வோம். இன்றைய இளைஞர்கள் உடல் உறுப்பு தானம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

 

 

 

 

Next Story

சர்ச்சையில் சிக்கிய ரோஜா; கேள்விகளால் துளைக்கும் சன்னி லியோன்

Published on 16/07/2023 | Edited on 16/07/2023

 

 Controversial Rose; Sunny Leone is peppered with questions

 

ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா சன்னி லியோன் குறித்து மேடையில் பேசிய சம்பவம் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு கேள்விகளை சன்னிலியோன் ரோஜாவிற்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக வைத்துள்ளார்.

 

ஆந்திராவில் வரவிற்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் 'வாராகி யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் ஒன்றை தொடங்கி பேசி வருகிறார்.

 

இந்நிலையில் அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரமான ரோஜா, 'பவன் கல்யாண் முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் பொழுது சன்னி லியோன் ஒழுக்கத்தைப் பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது' என பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசியுள்ளார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை சன்னி லியோன் அவரது டிவிட்டர் பக்கத்தில் ரோஜா பேசிய அந்த வீடியோவை பதிவிட்டு 'தான் ஒரு ஆபாச நடிகை தான் என்றாலும் தனது கடந்த காலத்தை நினைத்து நான் ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை. உங்களைப்போல் இல்லாமல் நான் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்வேன். உங்களால் வெளிப்படையாக உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை என்னைப்போல் வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது சன்னி லியோனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.