Advertisment

மனைவியின் இரண்டு கால்களையும் கோடரியால் வெட்டிய கணவன்...

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா பகுதியில் கணவன் மனைவி சண்டையில், கணவன் தனது மனைவியின் காலை கோடரியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ap woman

கிருஷ்ணா மாவட்டத்தின் லிங்கலப்பாடு கிராமத்தை சேர்ந்த பிச்சையா என்ற நபர் தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் போது அவரது காலை கோடரியால் வெட்டி துண்டாக்கியுளார். இது பற்றி அந்த தம்பதியின் மகள் கூறும்போது, வீட்டில் இருந்த மாட்டை விற்பனை செய்வது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் பெரிதாகவே, சிறிது நேரம் கழித்து பிச்சையா தனது மனைவியிடம் கோடரியை எடுத்து வர சொல்லி, அவர் எடுத்து வந்த கோடாரியாலேயே அந்த பெண்ணின் காலை பிச்சையா வெட்டியதாகவும்கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சண்டை பெரிதான நிலையில் பிச்சையாவின் மனைவி, அவரது சகோதரன் வீட்டிற்கு செல்வதாக கூறியதால் கோபமான பிச்சையா தனது மனைவியின் காலை வெட்டியிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். மேலும் பிச்சையா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கால்கள் வெட்டப்பட்ட நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Andhra
இதையும் படியுங்கள்
Subscribe