Skip to main content

கிரிக்கெட்டை போலதான் அரசியலும் எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம் - நிதின் கட்காரி

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று டெல்லியில் நடைபெற்ற 39-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை துவங்கி வைத்தார். பின்னர் மராட்டிய மாநிலத்திற்கு சென்ற அவர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மராட்டிய மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அரசியலிலும் கிரிக்கெட்டிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சில நேரங்களில் தோற்பது போல் இருக்கும், போட்டியின் முடிவில் திடீரென தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது. டெல்லியில் இருந்து இப்போது தான் வந்திருக்கிறேன். அதனால் மராட்டிய மாநிலத்தில் நடக்கும் அரசியல் பற்றி எனக்கு தெரியாது என்றார்.
 

k



மராட்டிய மாநிலத்தில் பாஜக அல்லாத அரசு அமைந்தால் மும்பையில் நடந்து வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிலை என்ன ஆகும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், " அரசாங்கங்கள் மாறினாலும், திட்டங்கள் தொடரும். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. பாஜக, தேசியவாத காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் எதுவாக இருந்தாலும், அரசாங்கத்தை உருவாக்கும் எந்தவொரு கட்சியும் நேர்மறையான கொள்கைகளை ஆதரிக்கும்" என்று தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கக் கட்டணம் வசூல் குறித்து மத்திய அமைச்சர் தகவல் 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Union Minister information on customs duty collection

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் சுங்கச் சாவடிகள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்தும், சாலை கட்டணம் வசூலிப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள 950க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 2,21,585.46 கோடி வசூலாகியுள்ளது. கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான 8 ஆண்டுகளில் ரூ. 2,27,963.25 கோடி சாலை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் ரூ. 17,759.12 கோடியாக இருந்த சாலை சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதன்படி, 2016 - 17 ஆம் ஆண்டில் ரூ. 18,511.69 கோடி வசூலாகியுள்ளது. 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 22,664.50 கோடி வசூலாகியுள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ. 25,145.19 கோடி வசூலாகியுள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 33, 907.71 கோடியாக இருந்த சுங்கக் கட்டண வசூல் தொகை 2022 - 23 ஆம் ஆண்டில் ரூ. 48,028. 19 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கடந்த 8 மாதங்களில் நாடு முழுவதும் வசூலான மொத்த சுங்கக் கட்டணத் தொகை  ரூ. 36,377.79 கோடியாகும்.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள 65 சுங்கச் சாவடிகளிலும் தொடர்ந்து சுங்கக் கட்டண வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 2,332. 78 கோடியாக இருந்த சுங்கக் கட்டணம் வசூல் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 2,695.77 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் ரூ. 3, 817.48 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2020- 21 முதல் 2022-23 வரையிலான 3 ஆண்டுகளில்  தமிழகத்தில் மொத்தம் ரூ.8,846 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு தீவிரவாதியுடன் தொடர்பு

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

Person arrested from bengaluru who threaten minister

 

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. மக்களவை உறுப்பினரான நிதின் கட்கரியின் அலுவலகம் மகாராஸ்டிரா மாநிலம், நாக்பூரில் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று இவரது அலுவலகத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், "ரூ.100 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சர் நிதின்  கட்கரியை கொலை செய்து விடுவேன்" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து நிதின் கட்கரியின் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 

அதன் பின்னர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அன்று அதே நபர் தொடர்பு கொண்டு ரூ. 10 கோடி தராவிட்டால் நிதின் கட்கரியை கொலை செய்து விடுவேன் என்று மற்றொரு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நாக்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெலகாவி சிறையில் இருந்த மர்ம நபர் தான் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

 

இதனையடுத்து, நாக்பூர் காவல்துறையினர் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் பூஜாரியை கைது செய்து நாக்பூர் கொண்டு வந்தனர். இந்த கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஜெய்ஷ் பூஜாரி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதில், பூஜாரிக்கும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சர் பாஷாவுக்கு இடையே தொடர்பு இருப்பதை நாக்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

 

இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திலும் அப்சர் பாஷாவுக்கு தொடர்பு இருந்துள்ளது. அதன் அடிப்படையில், அப்சர் பாஷா தற்போது ஜெய்ஷ் பூஜாரி இருந்த பெலகாவி சிறையில் தான் தண்டனை அனுபவித்து வருகிறார். தீவிரவாதி அப்சர் பாஷாவை கைது செய்ய நாக்பூர் காவல்துறையினர் பெலகாவி சென்றுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.