கர்நாடகா, ஹசன் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, தான் மீண்டும் முதலமைச்சராவதை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தடுப்பதாக கூறியுள்ளார்.

Advertisment

kumarasamy

முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் வெற்றிபெற்றும் முதலமைச்சர் ஆகாமல் போனது துரதிர்ஷ்ட வசம் என்று கூறியவர், பின் மக்களின் ஆசி இருந்தால் தான் மீண்டும் முதலமைச்சராவேன் என்று சித்தராமைய்யா தெரிவித்திருந்தார்.

Advertisment

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைந்திருக்கிறது. குமாரசாமி முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். என்னதான் கூட்டணியில் இந்த இரு கட்சியும் இருந்தாலும், பல மனஸ்தாபத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல, தற்போது சித்தராமைய்யா இவ்வாறு பேசியிருப்பது அனைவரையும் மீண்டும் சந்தேகிக்க வைக்கிறது.

இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்ததாவது: ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்றார்.

Advertisment