Advertisment

anupam hazra tested positive for corona

Advertisment

“தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் மம்தா பானர்ஜியை கட்டியணைப்பேன்” எனக்கூறிய பாஜக தேசிய செயலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் தேசிய செயலாளரான அனுபம் ஹஸ்ரா, அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், "கரோனாவைவிட பெரிய எதிரியான மம்தாவுடன் பா.ஜ.க தொண்டர்கள் போராடி வருகிறார்கள். ஒருவேளை எனக்கு கரோனா உறுதியானால், மம்தாவை நேரில் சந்தித்து அவரை கட்டி அணைப்பேன்" எனக் கூறினார். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மம்தா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அனுபம் ஹஸ்ரா மீது சிலிகுரி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அனுபம் ஹஸ்ராவுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனுபம் ஹஸ்ராவுக்கு அண்மையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.