anupam hazra controversial speech about mamata banerjee

தனக்கு கரோனா உறுதியானால், மம்தாபானர்ஜியை கட்டி அணைப்பேன் என பாஜக தேசிய செயலர் அனுபம் ஹஸ்ரா கூறியது சர்ச்சையாகியுள்ளது.

Advertisment

பாஜகவின் புதிய தேசிய செயலராக மேற்குவங்க மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் அனுபம் ஹஸ்ரா. இவர் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், "கரோனாவை விடப் பெரிய எதிரியான மம்தாவுடன் பா.ஜ.க தொண்டர்கள் போராடி வருகிறார்கள். ஒருவேளை எனக்கு கரோனா உறுதியானால், மம்தாவை நேரில் சந்தித்து அவரை கட்டி அணைப்பேன்" எனக் கூறினார். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மம்தா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக அனுபம் ஹஸ்ரா மீது சிலிகுரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுபம் ஹஸ்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment