Advertisment

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது சிபிஐ நீதிமன்றம்...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

anticipatory bail granted for chidambaram in aircel maxis case

Advertisment

ஏற்கனவே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கிலும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிபிஐயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற அறிவுரையுடன் ப.சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மேலும் விசாரணை வரை இருவரும் இந்தியாவை விட்டு வெளியே செல்வதற்கும் தடை விதித்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கிடைத்துள்ளதால் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ, அமலாக்கத்துறை கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Aircel-Maxis INX media P chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe