Skip to main content

காதலர்களை கதறவிட்ட ஆதியோகித்நாத்தின் ஆன்டி-ரோமியோ படை!!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018

 

anti-romeo

 

 

 

உத்தரபிரதேசம் மாநிலதத்தில் பெண்களிடம் கேலி மற்றும் கலாட்டா செய்யும் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க அம்மாநில முதல்வர் ஆதியோகித்நாத் ஆன்டி-ரோமியோ படை என்ற பிரிவை ஏற்படுத்தியுள்ளார்.

 

anti-romeo

 

 

 

அவர் உருவாகியுள்ள அந்த ஆன்டி-ரோமியோ படை பூங்கா, சாலையில் பெண்களை கேலி கிண்டல் செய்யும் ஆண்களுக்கு தண்டனை தந்து வருகின்றனர். இந்நிலையில் கான்பூர் மாவட்டம் காடிட்  பகுதியில் ஒரு பூங்காவில் ஒரு இந்து பெண்ணும் முஸ்லீம் இளைஞரும் நெருக்கமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ஆன்டி-ரோமியோ படையினர் அவர்களை பிடித்து எச்சரித்தனர். பின்னர் அந்த பெண்ணை அந்த இளைஞரின் கையில் ராக்கி கட்டவைத்தும், தான் செய்தது தவறு என அந்த இளைஞரை அந்த பெண்ணின் காலில் விழவைத்து மன்னிப்பு கோரவைத்தும் அதை புகைபடமெடுத்து வெளியிட்டுள்ளனர் ஆன்டி -ரோமியோ படையினர். 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி ராமர் கோயில் திறப்பு; கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட உ.பி. அரசு! 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Inauguration of Ayodhya Ram Temple; U.P.  Government ordered educational institutions.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்று ராமர் கோயில் திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், 18 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தகவல் பலகைகளை வைக்க வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“அயோத்தி ராமர் கோவில் தான் ராம ராஜ்ஜியத்தின் தொடக்கம்” - யோகி ஆதித்யநாத்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 Yogi Adityanath says The Ram temple in Ayodhya is the beginning of Rama's kingdom

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சத்தீஸ்கர் மாநிலம், கோன்டா நகரில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஆட்சியில் ஜாதி, மத அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் இருப்பது தான் ‘ராம ராஜ்ஜியம்’. அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களிடம் போய் சேரும். அனைவருக்கு நாட்டின் வளர்ச்சியில் இருந்து உரிய பங்கு கிடைக்கும். 

 

பாதுகாப்பு, வசதிகள் மற்றும் வளங்களின் உரிமைகள் ஆகியவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். இது தான் ராமராஜ்ஜியம். உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும், இந்த கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். அயோத்தியில் உருவான ராமர் கோவில் தான் ராம ராஜ்ஜியம் தொடங்கப்பட்டதற்கான அறிகுறி. இந்த  விஷயத்தில் உத்தர பிரதேச மக்களை விட சத்தீஸ்கர் மக்கள் தான் அதிகளவில் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் சத்தீஸ்கர் மாநிலம் தான் ராமரின் தாய்வழி இடம்

 

அதே நேரத்தில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட விடாமல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இப்போது கூட சத்தீஸ்கரில் ‘லவ் ஜிகாத்’ மதமாற்றம் ஆகியவற்றை ஆதரிக்கும் நபராக முதல்வர் பூபேஷ் பாகேல் இருக்கிறார். பா.ஜ.க சத்தீஸ்கரில் ஆட்சி அமைந்தால், லவ் ஜிகாத், மாடுகளை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.