தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ப்ரியங்காவின் உடல் கண்டெடுக்கப்பட்ட அதே பகுதிக்கு அருகில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியின் சித்துலகுட்டா சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்சாபாத் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.