ADVERTISEMENT

மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம்... டெல்லி அரசு அறிவிப்பு

05:58 PM May 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது. இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஏற்கனவே டெல்லியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், மேலும் ஒரு வாரம் பொதுமுடக்கம் நீடிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தற்பொழுது வரை அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளின் படியே அடுத்த ஒரு வாரத்திற்கு பொதுமுடக்கம் டெல்லியில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT