Advertisment

மேற்குவங்கத்தில் தொடர்ந்து காலியாகும் பாஜக கூடாரம்!

bjp mla

மேற்கு வங்கத்தில் இந்தாண்டுநடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல்காங்கிரஸ் மாபெரும்வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தின் முதல்வரானார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து திரிணாமூல்காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே நான்கு பாஜக எம்.எல்.ஏ-க்கள் திரிணாமூல்காங்கிரஸில் இணைந்திருந்த நிலையில், இன்றுகிருஷ்ண கல்யாணி என்றஒரு பாஜக எம்.எல்.ஏ திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

Advertisment

தனதுகட்சி எம்.பி-யுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து , பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளகிருஷ்ண கல்யாணி, "மேற்குவங்கத்தில் மக்களுக்காக உண்மையாகப் பணி செய்யும் ஒரே ஒருவர் மம்தா பானர்ஜிதான்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கசட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், இதுவரை ஐந்து பாஜக எம்.எல்.ஏ-க்களும், பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணையமைச்சரும்திரிணாமூல்காங்கிரஸில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BJP MLA tmc west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe